மதுரை திருநகரில் அன்னை பூமி புரட்சிகர கைப்பந்து கழகத்தின் சார்பில் இளைஞர்களிடையே போதை ஒழிப்பு, செல்போனில் மூழ்கும் பழகத்திலிருந்து மிட்டது, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருநகர் அண்ணா பூங்காவில் ஹேண்ட் பால் எனப்படும் கைப்பந்து எறிதல் போட்டியில் ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் முறை பந்தை கடத்தி சாதனை படைக்கும் நிகழ்ச்சி இன்று (டிச. 29) நடைபெற்றது.
16 பேர் கொண்ட கைப்பந்து குழுவில் இரண்டு மாணவிகள் உட்பட 4 பேர் கொண்ட குழுவாக 4 அணியாக பிரிந்து குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான இந்த முயற்சியில் பங்கேற்றனர்.
இந்த போட்டி காலை 8. 20 மணி முதல் தொடங்கி 9. 20 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெற்றது, இதுபோல் ஏற்கனவே ஜெர்மனியில் நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்து 704 முறை பந்தை கடத்தி சாதனை படைத்துள்ளனர். அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக ஒரு மணி நேரம் நடைபெற்ற போட்டியில் 16 மாணவர்களும் 14, ஆயிரத்து 154 முறை பந்தை கடத்தி குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.