மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் ஏழாவது பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் ஆறுமுகம் என்பவரது வீட்டில் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து உடனடியாக பாம்பு பிடி வீரர் சினேக் பாபுவிற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சினேக் பாபு கால்வாயில் இருந்து வந்த அரிய வகையான தண்ணீர் சாரை பாம்பை மீட்டார்.