தமிழக ஆளுநர் நாளை (ஜூலை 29) மதுரைக்கு வருகை தர உள்ளார்.
தமிழக ஆளுநர் ரவி அவர்கள் நாளை மதியம் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வருகிறார். மதுரை வரும் ஆளுநர் நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்தபின்பு மாலையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராஜர் கலைக் கல்லூரியில் நடக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்பு இரவு விமான மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.
மதுரைக்கு ஆளுநர் வருகையை முன்னிட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.