உசிலம்பட்டியில் மின் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்.

84பார்த்தது
உசிலம்பட்டியில் மின் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி. இராமநாதபுரம் உபமின் நிலையத்தில் பணியாற்றும் பாண்டி என்பவர் மின் தடையை சரி செய்ய சென்ற போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக கடந்த 17. 05. 2024 அன்று சாப்டூர் காவல் நிலையத்தில் அவரது மேல் அதிகாரியான மின் பாதை ஆய்வாளர் ஜெயக்கொடி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று உசிலம்பட்டி உப மின் நிலையத்தில் மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துடன், செயற் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த போராட்டத்திற்கு ஆதரவாக எழுமலை, டி. இராமநாதபுரம், நாகமலைப்புதுக் கோட்டை, செக்காணூரணி, எம். கல்லுப்பட்டி, சின்னக்கட்டளை, வாலாந்தூர், உத்தப்பநாயக்கணூர் என சுமார் 14 உப மின் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ,

தொடர்புடைய செய்தி