மதுரை அருகே கூலித்தொழிலாளி திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மேலூர் புலிப்பட்டியை சேர்ந்த பூசாரி மகன் வேலு(61) என்பவர் சிலைமான் அருகே உள்ள யாசின் என்ற தார் சாலை அமைக்கும் நிறுவனத்தில்
வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இளமனூர்_ விளத்தூர் சாலையில் அய்யனார் கோவில் அருகே மயங்கிய நிலையில் இருப்பதாக அவரது மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் வந்துள்ளது.
உடனே சம்பவ இடத்திற்கு சென்று அவரது மகன் பார்த்தபோது உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.
இதுகுறித்து சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வேலுவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்