மதுரை மாநகர் மாவட்ட தி. மு. க. மாணவர் அணி சார்பில் பசுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடைபெறவுள்ளது.
முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி தி. மு. க. மாணவர் அணி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் பசுமலை கோபால்சாமி திருமண மண்டபத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.
மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பும் வழங்கப்படும். போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும். மற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
முதல் பரிசு 10 ஆயிரம்
இரண்டாம் பரிசு 7 ஆயிரம்.
மூன்றாம் பரிசு 5 ஆயிரம்.
ஆறுதல் பரிசு ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.