விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதை நெல் ரகங்கள்.

72பார்த்தது
விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதை நெல் ரகங்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் வகைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், விதைக் கிராம திட்டம் சார்பில் சம்பா பருவத்திற்கு தேவையான நெல் விதைகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு பி. பி. டி. 1504, ஆர். என். ஆர். 15048, கோ 55, பி. கே. என். 13, என். எல். ஆர். 34449 ஆகிய உயர் விளைச்சல் தரும் நெல் ரகங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன் மகசூலை 20 சதவீதம் அதிகரிக்க, நெற் பயிருக்கு மிகவும் அவசியமான, துத்தநாகம், போரான், காப்பர் நுண்ணுாட்ட உரங்கள், திரவ உயிர் உரங்களும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் திருநகர் 2வது பஸ் நிறுத்த பகுதியில் உள்ள வேளாண் அலுவலகத்தில் இதனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி