மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையில் டூவீலரில் இருந்த ரூ. 1. 90 லட்சம் திருடு போன சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்த ராஜபாண்டி (42) என்பவர் காலணி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று நிலம் தொடர்பாக பத்திர பதிவு செய்வதற்காக ரூ 2 லட்சத்தை வங்கியிலிருந்து எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு ரூ 10 ஆயிரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ள ரூ. 1. 90 லட்சத்தை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது வண்டியிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்