கூத்தியார்குண்டு ஜவுளிக்கடையில் துணிமணிகள் கொள்ளை.

565பார்த்தது
கூத்தியார்குண்டு ஜவுளிக்கடையில் துணிமணிகள் கொள்ளை.
மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு பகுதியில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து துணிமணிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு பேருந்து நிறுத்தம் அருகே லட்சுமி ஜவுளிகடையை தோப்பூரை சேர்ந்த மாயி மகன் செளந்தரராஜன் (48) என்பவர் நடத்தி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு நேற்று காலை மீண்டும் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையிலிருந்த 49, 890 மதிப்புள்ள துணிமணிகள் மற்றும் பணம் ரூ. 5, 500 ஆகியன கொள்ளயடிக்கப்பட்டது தெரிந்தது.

இதுகுறித்து கடை உரிமையாளர் ஆஸ்டின் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி