மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் சார்பில் மிலாடி நபி மாநாடு வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் தலைவர் எம். அப்துல்காதர் தலைமை வகித்தார். செயலர். நிஷ்தார் அகமத், ஒருங்கிணைப்பாளர் எம். பிஸ்மில்லாக்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட அரசு காஜி எம். சபூர்முகைதீன் துவக்க உரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் வாரியத்தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் சிறப்புரை ஆற்றி பேசியதாவது:
இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கிறது, மக்களை மதம் மாற்றம் செய்கிறது, விஞ்ஞானத்திற்கு எதிரானது, பெண்களுக்கு உரிமைகளை வழங்காதது, தேசப்பற்று இல்லாதது என பொய் பிரச்சாம் செய்து மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். உலகில் பில்லியன் கணக்கில் வியாபாரம் செய்யப்படும் போதை பொருள்கள், மது, ஆயுதம் வர்த்தகம், விபச்சாரம், சூதாட்டம் உள்ளிட்டகளுவைகளுக்கு எதிரானது இஸ்லாம் கோட்பாடுகள். இந்த வியாபாரத்தை தடுப்பதற்கு வலுவான கருவியாக இஸ்லாமிய கோட்பாடுகள் உள்ளன. இந்திய சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்களின் பங்கு மகத்தானது என்றார்.
இந்நிகழ்வுக்கு ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.