மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி பகுதியில் பாலமேடு காவல் உதவி ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் போலீசார் வாகன சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் வந்த சத்திரவெள்ளாளபட்டி பிரசாந்த் (29) மறவபட்டி கவுதமை (19), ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.