இரயில் மோதி வடமாநில வாலிபர்கள் பலி.

81பார்த்தது
இரயில் மோதி வடமாநில வாலிபர்கள் பலி.
மதுரை அருகே இரயில் மோதி வடமாநில தொழிலாளிகள் இருவர் பலியானார்கள்.

மதுரை ஐராவதநல்லுார் அருகே கல்லம்பல் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இங்கு டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணியில் உ. பி. , யை சேர்ந்த ஆறு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கி பணியில் ஈடுபட்டனர். நேற்று அவர்களில் கியானந்த் பிரதாப், 22, மசூதன் பிரஜாபதி, 30, ஆகிய இருவரும் கல்லம்பல் மேம்பால பகுதிக்கு சென்றனர்.

மேம்பாலம் அடியில் ரயில்வே தண்ட வாளத்தை மாலை 4: 00 மணிக்கு கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து மானாமதுரை வரை தண்டவாள ஆய்வுக்காக இயக்கப்பட்ட ரயில் இன்ஜின், இவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.

தகவல் அறிந்த மதுரை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி