மதுரை: அங்கன்வாடி முன் கழிவு நீர். நோய் தொற்று அபாயம்.

51பார்த்தது
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதியில் உள்ள அயன் பாப்பாக்குடி அங்கன்வாடி மையம் முன்பாக சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் உள்ளே செல்வதில் சிரமம் மேலும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்திருந்த நிலையில் அவர் சென்ற பாதையில் கூடியிருந்த மக்களால் ஏற்பட்ட கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டதால் அவனியாபுரம் ஊருக்குள் இருக்கக்கூடிய குப்பைகள் கடந்த இரண்டு நாட்களாக அகற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குப்பை தொட்டிகள் நிரம்பி சாலைகளில் குப்பைகள் வீசப்படுவதால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதால் உடனடியாக இதை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி