மதுரை: A1 தொழில்நுட்பத்தை பயிலும் மாணவர்கள்.

64பார்த்தது
மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி 1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

தற்போது செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையில் அவசியமானதாகவும் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுகிறது. இந்த நிலையில் வருங்காலத்தில் AI தொழில் நுட்பத்தின் அவசியம் கருதி கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படைய செய்வதற்காக பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு AI
பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

AI செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை திறந்து வைத்து பள்ளி ஆசிரியர்களே உருவாக்கி A l பாட புத்தகத்தையும் இன்று பள்ளி நிர்வாகம் வெளியிட்டது.

முன்னதாக பள்ளியின் கலையரங்கில் பள்ளியின் இயக்குனர் நடன குருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த் மற்றும் முனைவர் சுரேஷ் மாணாக்கர்கள் ஆசிரியர் பெருமக்கள் முன்னிலையில் AI பாட புத்தகத்தை வெளியிட்டனர்.

பின்னர் வளர்ச்சி, அதன் செயல்பாடு, அதன் முக்கியத்துவத்தை குறித்து முனைவர் சுரேஷ் பாபு மாணாக்கர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார். பின்னர் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை திறந்து வைத்து ஆய்வகத்தை பார்வையிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி