மதுரை: அதிகமான மாத்திரைகளை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு

55பார்த்தது
மதுரை: அதிகமான மாத்திரைகளை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள வேடர் புளியங்குளம் சேர்ந்த ஆண்டியின் மகள் வீர யோகேஸ்வரி (17) என்பவர் திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு ஒழுங்காக செல்லவில்லை. 

இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஒழுங்காக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறிய நிலையில் கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்த பல்வலி மற்றும் கால் வலி மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டுள்ளார். இதனால் இவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (மார்ச் 26) உயிரிழந்தார். இது குறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் ஆண்டி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி