மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடல் வழித் தொழுகை இன்று (மார்ச். 31) நடைபெற்றது. இதில் 1500 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 2000 பேர் கலந்து கொண்டனர்.
உலக மக்கள் சமத்துவமாகவும் சகோதரத்துவமாகவும் வாழவும் ஒற்றுமையின் எடுத்துக்காட்டாக தேர்தலில் தொழுகை நடைபெற்றது மேலும் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தால் நடைபெற்ற தாக்குதலில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் காயம் பட்டவர்கள் பூர்ண நலம் வேண்டியும் இறந்ததற்கு இறந்தவர்களுக்கு ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்தனை நடைபெற்றது.