மதுரை திடீர் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.எஸ்.ஐ) ஜெயபாண்டி என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் திருக்கார்த்திகை தினத்தன்று திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் இருந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஜெயபாண்டி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் எஸ்.எஸ்.ஐ ஜெயபாண்டியை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.