மதுரை: மருத்துவமனை வளாகத்தில் இருந்த பாம்பு மீட்பு.

70பார்த்தது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி முனியாண்டிபுரத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதை அறிந்த மருத்துவமனை அலுவலர்கள் திருநகரை சேர்ந்த பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபு அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் நல்ல பாம்பை லாவகமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தார். இச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி