மதுரை: காவலர் கொலை திடுக்கிடும் தகவல்கள்

56பார்த்தது
மதுரை: காவலர் கொலை திடுக்கிடும் தகவல்கள்
மதுரை மாவட்டம் ஈச்சனோடையில் கடந்த 18ம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து பெருங்குடி போலீசார் விசாரணையில் விருதுநகர் மாவட்டம் திருச்சூழி அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த இளையாங்குடி காவல் நிலைய தனிப்படை காவலர் மலையரசன் என தெரிந்தது. 

போலீசார் விசாரணையில் மனைவி உயிரிழந்த சோகத்தில் விடுமுறையில் இருந்த மலையரசன் பைக் மூலம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து மனைவி மருத்துவமனையில் இருந்ததே போது அடிக்கடி ஆட்டோவில் சென்ற காவலருக்கு வில்லாபுரத்தைச் சேர்ந்த மூவேந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுநருடன் பழக்கம் இருந்துள்ளது. மனைவி இறந்த சோகத்தில் மலையரசன் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரனுடன் பெருங்குடி அருகே காட்டுப்பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போழுது காவலர் மலையரசனிடம் இருந்து கூகுள் பே ஆப் மூலம் பணத்தை பறிக்க ஆட்டோ ஓட்டுநர் முயன்றுள்ளார். 

இதில் ஆட்டோ ஓட்டுநர் மலையரசனை தலையில் அடித்துக் கொலை செய்து பின்னர் எரித்து ஈச்சனேரி கண்மாய் அருகே வீசிச் சென்றதாக தெரிகிறது. ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரனை கைது செய்ய போலீசார் சென்றபோது சார்பு ஆய்வாளர் மாரிகண்ணன் என்பவரை கையில் வைத்திருந்த ஆயுதத்தால் தாக்கி, போலீசார் மூவேந்திரனை துப்பாக்கியால் இன்று சுட்டுப் பிடித்துள்ளனர். மூவேந்திரன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ளார். உதவி ஆய்வாளர் மாரிகண்ணனும் மருத்துவமனையில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி