மதுரை மேலூரில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிராக
இன்று (ஜன. 10) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள மதுரை வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
மீண்டும் இந்திய ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுகிறோம். இத் திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பல்கலைகழக மானியக்குழு அண்மையில் வெளியிட்டுள்ள புதிய விதிகள் மாநில உரிமைகளை பறிப்பது போன்று உள்ளது. உயர் கல்வி அனைத்தையும் இந்திய ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டிருக்கிறது.
துணைவேந்தர் நியமனம், பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றுக்கு மாநில அரசுக்கு எந்த அதிகாரம், உரிமை இல்லை என்பது போல் கொண்டு வந்துள்ளது இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக புதிதாக கொண்டு வரப்பட்ட இந்த விதிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். சீமான் அவர்களின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக உள்ளது. குதர்க்க வாதமாக உள்ளது அவர் பேசுகிற அரசியலுக்கு அது அவருக்கு எதிராக முடியும்.
சீமான் பேச்சுக்கு அண்ணாமலை ஆதரிப்பார். அவர் சார்ந்துள்ள சங்பரிவார் அமைப்புகள் ஆதரிக்கும். சீமான் அவர்கள் பேசியதை புரிந்து நடக்க வேண்டும்.