மதுரை விமான நிலையத்தில் நேற்று (மார்ச். 20) இரவு சீமான் பேட்டியளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய போது திரும்பத் திரும்ப ஊடகங்களை மதிக்கிறேன். கேட்பதற்கெல்லாம் பதில் சொல்கிறேன். போராட்டத்தின் போது செய்தி வருவதில்லை. மின் கட்டண உயர்வு சீர்கேடுக்கு போராடினேன். அதனை ஒளிபரப்பவில்லை ஆனால் தவறான செய்தியை மட்டும் ஒளிபரப்புகிறீர்கள் என்று செய்தியாளர்களிடம் குற்றச்சாட்டினை வைத்து பேசிய பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.