மதுரையில் சமீபத்தில் நடந்த கிளாமர் காளி கொலை வழக்கில் தேடபட்டு வந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற நபரை வேலம்மாள் மருத்துவமனை பின்புறம் இன்று ( மார்ச். 31) மாலையில் போலீசார் பிடிக்க முற்பட்ட போது போலீசாரை தாக்கியதால் ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளர் பூமிநாதன் என்கவுன்டர் செய்தார். மதுரை மாநகர காவல்துறை அதிரடியான நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.