மதுரை: தனிப்படை காவலர் மரணத்தில் உறவினர்கள் சந்தேகம்

79பார்த்தது
மதுரை: தனிப்படை காவலர் மரணத்தில் உறவினர்கள் சந்தேகம்
மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச். 17) மதியம் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத வாலிபர் உடலை பெருங்குடி போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 இந்த நிலையில் எரிந்த நிலையில் உயிரிழந்த வாலிபர் தற்போது திருச்சூர் சேர்ந்த மலையரசன் (36) என்றும் சிவகங்கை இளையான்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் தனிப்படை காவலர் என்றும், இவரது மனைவி கடந்த 1ஆம் தேதி விபத்தில் காயமடைந்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஐந்து தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் மனைவி குறித்த கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக இரு தினங்களுக்கு முன் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவலர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி