மதுரை: ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்.

75பார்த்தது
மதுரை சிந்தாமணி அருகே உள்ள பனையூர் கண்மாயில் சில நபர்கள் ஆக்கிரமித்து வீடு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டிருப்பதாகவும் இதனை அகற்ற வலியுறுத்தி கடந்த ஐந்து வருடங்களாக வருவாய் அதிகாரிகளிடம் புகார் அளிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனக் கூறி இன்று ( டிச. 23) காலை பனையூர் ஊராட்சி அலுவலகத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனாலும் அதற்கு உடன்படாத கிராம மக்கள் வருவாய் அலுவலரின் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இன்னும் இரு வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வருவாய் அலுவலர்கள் கூறியதை தொடர்ந்து வாகனத்தை விடுவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி