மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுந்தோறும் தைப்பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தற்போதே தீவிரமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் காவல் துணை ஆணையர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நேற்று (டிச. 24)மாலை ஆய்வு மேற்கொண்டனர்.