மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாசேரியில் தமிழ் செம்மொழியாக முதன் முதலாக குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞரின் 155 வது பிறந்த தின விழா இன்று (ஜூலை. 6) கொண்டாடப்படுகிறது.
தமிழ்மொழியின் தொன்மையும் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல சூரிய நாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றி நிறைய தமிழ் நூல்கள் எழுதியுள்ளார். அவரை போற்றும் விதமாக தமிழக அரசு சார்பில் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இன்று பரிதிமாற் கலைஞரை 155வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பரிதிமாற்கலைஞர் சிலைக்கு அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.