மதுரை; திருப்பரங்குன்றம் உப கோவில்களில் கும்பாபிஷேகம்

73பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி பூசம் நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.   12 ஆண்டுகள் முடிந்த நிலையில் ஆகம விதிப்படி 2 கோடியே 44 லட்சத்தில் 20 திருப்பணிகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்திட அறங்காவலர் குழு முடிவு செய்தது. இதற்காக முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம்10-ந் தேதி ராஜகோபுரம் மற்றும் கோவிலின் உப கோவில்களுக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 17-ந் தேதி அன்று முதற்கட்டமாக. இந்த கோவிலின் துணை கோவில்களுக்கு திருப்பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோவிலில் உப கோவில்களான அருள்மிகு சொக்கநாதர் சாமி திருக்கோவில், அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில், அருள்மிகு குருநாதர் சாமி திருக்கோவில், பாம்பாலம்மன் சுவாமி திருக்கோவில்களில் இன்று (ஏப். 16) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து வருகிற ஜூலை 14ஆம் தேதி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி