மதுரை: விஜயகாந்திற்கு கடமைப்பட்டுள்ளேன். தேவா பேட்டி.

80பார்த்தது
மதுரை சுற்றுச்சாலை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை இன்று (டிச. 23) சந்தித்த இசையமைப்பாளர் தேவா கூறுகையில்

"மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது எனது பாடல் "வராரு வராரு அழகர் வாராரு என்ற பாடல்" ஒலித்துக் கொண்டே இருக்கும் அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதனை நான் முதல்முறையாக மதுரை மண்ணில் பாட இருக்கிறேன். இதற்கான வாய்ப்பை கேப்டன் விஜயகாந்த் எனக்கு அளித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்த இசைக் கச்சேரியில் 60 க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கொண்ட இசைக் குழுவினருடன் இணைந்து நடத்த உள்ளேன்.
பாடகர் மனோ, அனுராதா ஸ்ரீராம், அஜய் கிருஷ்ணா, சபேஸ், முரளி, ஸ்ரீ காந்த் தேவா உள்ளிட்டோருடன் நானும் கலந்து கொள்கின்றேன்.
வரும் ஜனவரி 18ம் தேதி அன்று 5 முதல் 6 மணி நேரம் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி