மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலில் கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் முக்கியமான நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நேற்று (மார்ச் 20) நிறைவு நாளன்று தீர்த்தவாரி உற்சவத்தில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. இரவு முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து வீதியுலா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.