மதுரை: காதலியை திருமணம் செய்ய பணம் கேட்ட குடும்பத்தினர் கைது

60பார்த்தது
மதுரை: காதலியை திருமணம் செய்ய பணம் கேட்ட குடும்பத்தினர் கைது
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரை சேர்ந்த இளம் பெண் ஒருவரை அவரது உறவினரான நிலையூரை சேர்ந்த அஜயன் (27) என்பவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கியுள்ளார். 

இந்நிலையில் திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ. 50 லட்சம் வரதட்சணை தரவேண்டும் என அஜயன் தந்தை ராஜசேகர் (60) என்பவர் மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அஜயன், ராஜசேகர், மனைவி விக்டோரியா (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி