மதுரை திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அதில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அல்தாப் என்பவரை இன்று (மார்ச். 28) காலை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். ரம்ஜான் தொடர்பாக நேற்று முழுவதும் வேலை பார்த்த காரணத்தாலும் மேலும் என் தற்போது நோன்பில் இருப்பதாலும் மயக்கம் ஏற்பட்டதால் தற்போது காவல் நிலையம் அருகே உள்ள திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.