மதுரை: நான்காண்டு சாதனையை விளக்கி திமுக கூட்டம்

65பார்த்தது
மாவட்ட திமுக சார்பில் திருநகரில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று (மே. 9) இரவு நடைபெற்றது.

மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நான்காம் ஆண்டு சாதனைகள் கூட்டத்திற்கு பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை வகித்தார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 5ன் தலைவர் சுவிதா விமல் மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி கருப்பசாமி முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பேச்சாளராக முன்னாள் மேலவை உறுப்பினர் கம்பம் செல்வேந்திரன்
கலந்து கொண்டார்.

சவால்கள் நிறைந்த நான்காண்டு கால ஆட்சியில் துவக்கத்திலேயே கொரோனா இரண்டாவது அலை வந்து பல உயிர்களை இழந்த நிலையில் சிறப்பாக செயல்பட்டார் முதல்வர்.
தமிழகத்தில் ஆட்சி செய்த அதிமுக அரசு நாலு லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் சுமையை வைத்து சென்றது அந்த சவால் நிறைந்த பணியில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி