மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் நீர்மோரினை விரும்பி அருந்தி சென்ற வண்ணம் உள்ளனர். இது பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோல அனைத்து கோவில்களிலும் நீர் மோர் கொடுத்தால் வெயிலுக்கு இதமாக இருக்கும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.