மதுரை: பூக்குழி இறங்கிய பக்தர்கள்.

62பார்த்தது
வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று (ஜூன். 9) மதியம் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பால்குடம், காவடி, பரவ காவடி அழகு குத்தி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்

அந்த வகையில் திருப்பரங்குன்றம் 16ஆம் கால் மண்டபடியில் பக்தர்கள் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.

இதனையொட்டி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி