மதுரை: கார், ஆட்டோ உடைத்து டூவீலரை எரித்த சம்பவத்தால் பரபரப்பு

56பார்த்தது
மதுரை அருகே வில்லாபுரம் பகுதியில் உள்ள அகஸ்தியர் தெருவில் இரு ஆட்டோவிற்கு கண்ணாடிகள் உடைத்தும் ஒரு பைக் தீவைத்து எரிக்கப்பட்டது.
இதே போல் கீரைத்துறை அம்பேத்கர் நகர் பகுதியில் ஒரு பைக், ஆட்டோ, இரண்டு கார்கள் ஆகியன நேற்று (மார்ச். 30)இரவு கண்ணாடி உடைக்கப்பட்டது.

இது குறித்து கீரைத்துறை, அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து CCTV காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வில்லாபுரம் பகுதியில் போதையில் கார், டூவீலர்களை உடைத்து சென்ற மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்து கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது அப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி