சின்ன பிள்ளத்தனமாக பேசுவதா? எம். பி பேட்டி.

78பார்த்தது
சின்ன பிள்ளத்தனமாக பேசுவதா? எம். பி பேட்டி.
மதுரை திருநகர் எம்பி அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வாளுக்கு வேலி அம்பலத்தின் 223ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

இந்த முறையும் மீண்டும் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது. ஒரு கேபினட் அமைச்சரை தமிழகத்திற்கு பாஜக கொடுத்திருக்க வேண்டும். ஒரு கேபினட் அமைச்சரே அமர வைக்க இந்த அரசருக்கு மனமில்லை.

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கிய எண்ணிக்கை கோரிக்கை குறித்த கேள்விக்கு

விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவியதால் கே. டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறினார்கள். விருதுநகர் தேர்தலில் வீடியோ கண்காணிப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்ற பிறகு அடுத்த நாள் சென்னையில் அமர்ந்து பிரமலதா விஜயகாந்த் பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு. பொறுப்பில்லாத பேச்சை பிரேமலதா விஜயகாந்த் செய்கிறார்.

மூன்றாவது முறையாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக தோல்வியை தழுவி இருக்கிறது அதுதான் உண்மை. பாஜக ஆயுட்காலம் இந்த முறை பிகார் தேர்தலில் முடிந்து விடும். இந்தியா கூட்டணியில் பீகாரில் ஆட்சி அமையும்.

தொடர்புடைய செய்தி