மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாத கார்த்திகை தினத்தில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி மூன்று ரத வீதிகளில் புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.
ஆனால் வைகாசி கார்த்திகையான நேற்று மழை பெய்ததாலும், 16 கால் மண்டபம் அருகே ரோட்டில் குழாய் பதிக்கும் பணி நடப்பதாலும், வெள்ளி பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி கோயில் ஆஸ்தான மண்டபத்தில் புறப்பாடு நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.