விவசாயிகளுக்கு சிறந்த பட்ஜெட். பாஜக தமிழக பொறுப்பாளர் பேட்டி

70பார்த்தது
மதுரை விமான நிலையத்தில் இன்று காலை பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டியளித்தார்.


பெரம்பலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுதாகர் ரெட்டி மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

மதுரையில் மட்டுமே நாம் தமிழர் கட்சியினர் உட்பட 12 பேரை கொலை செய்துள்ளனர்.

இங்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முறைகேடு நடைபெற்றது.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு.
இந்த முறை பட்ஜெட் சிறப்பாக உள்ளது. விவசாயிகள் உள்ளிட்டோருக்கு இது சிறந்த பட்ஜெட் ஆக உள்ளது.

நிதி ஆயோக் கூட்டத்தில் பாரபட்சம் நடந்ததாக மம்தா குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

அனைத்து முதல்வரும் பேசுவதற்கு ஏழு நிமிடங்கள் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. அவருக்கு மேற்கு வங்கத்தில் முக்கிய மீட்டிங் இருந்ததால் அங்கு செல்வதற்காக புறப்பட்டார். அதை அரசியலாக்குவதற்காக அப்படி குற்றம் சாட்டுகிறார்.

அண்ணாமலை வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல்கள் உள்ள நிலையில் தற்காலிக மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு:

நிர்வாக அமைப்பு உள்ளது. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

தொடர்புடைய செய்தி