மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு பேரணி.

69பார்த்தது
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி மற்றும் அதிகாரம் அளித்தல் ஒருங்கிணைந்த மையத்தில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மதுரை வில்லாபுரம் ஹவுஸிங் போர்டில் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு அதிகாரம் அளித்தலுக்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தில் தூய்மையான 15 நாட்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள பூ மார்க்கெட் மற்றும் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ரோடு ஆகிய பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

மேலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர். மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இடம் தூய்மையாக இருப்பது குறித்து விளக்கம் அளித்து மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு குறித்து விளக்கினர் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் எவ்வாறு கழுவ வேண்டும் என விளக்கம் அளித்தனர். மேலும் தூய்மை பதினைந்து நாட்கள் நிகழ்ச்சி ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 2 இன்று வரை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி