திருமங்கலத்தில் உள்ள அன்னை பாத்திமா கல்லூரியில் முதலாம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர் நேற்று திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கள்ளிப்பட்டி மஞ்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
அதில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு எடுத்துக் கூறினர் இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.