திருமங்கலம் கூடக்கோவில் அருகே உள்ள எலியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதம் 48 இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடக்கோயில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக் கார்த்திகா மற்றும் போலீசார் கடையில் சோதனை செய்து போது கடையில் 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்து தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.