மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜபுரம் வடபகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் (மார்ச். 25) சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் இரயில் அடிபட்டு சடலமாக கிடந்தார். இதையறிந்த இரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்ற விபரங்கள் அறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.