திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சாத்தங்குடி ஊராட்சியில் உள்ள புல்லமுத்தூர், போல் நாயக்கன்பட்டி, புலியூர் பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் விவசாய வேலைகளுக்கும் ஈடுபடுத்தப்படுகின்றனர் இக்கிராமங்களின் பணித்தள பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வேலையை பகிர்ந்து அளிக்காமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வேலை வழங்குவதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர் ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலந்து சென்றனர்.