திருமங்கலம்: ஆடுகள் திருட்டு..போலீஸ் விசாரணை

54பார்த்தது
திருமங்கலம்: ஆடுகள் திருட்டு..போலீஸ் விசாரணை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த திக்விஜயன் (42) என்பவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 15) ஆடுகளுக்குத் தீவனம் வைத்து விட்டு வீட்டில் தூங்கச் சென்று விட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது இரண்டு கிடாய் குட்டிகள், இரண்டு பெட்டைக்குட்டி ஆடுகளை காணவில்லை. இதனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திக்விஜயன் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி