மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் இன்று (டிச. 30 ) அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்கள் தலைமையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை மற்றும் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.