சுங்கச்சாவடியை இடிக்க ஜேசிபியுடன் வந்த போராட்டக்காரர்கள்

83பார்த்தது
சுங்கச்சாவடியை இடிக்க ஜேசிபியுடன் வந்த போராட்டக்காரர்கள்
சுங்கச்சாவடியை இடிக்க ஜேசிபியுடன் வந்த போராட்டக்காரர்கள். பரபரப்பு.!

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை இடிக்க ஜேசிபி வாகனங்களுடன் வந்த போராட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50% சுங்கக்கட்டண வசூலிப்பதை கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் உள்பட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அப்போது சுங்கச்சாவடியை இடிக்க ஜேசிபி வாகனங்களுடன் போராட்டக்காரர்கள் வந்ததாகவும், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. ஜேசிபியுடன் வந்த போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் சுங்கச்சாவடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி