திருமங்கலம் தாலுகாவில் இ சேவை மையத்தின் ஆலோசனை கூட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ சாந்தி தலைமையில் நடந்தது.
தாசில்தார் (பொறுப்பு) பார்த்திபன் முன்னிலை வகித்தார். தமிழகத்தில் இ சேவை மையங்கள் மூலம் செய்யப்படும் விண்ணப்பங்களில் குளறுபடி காரணமாக அதிக அளவில் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதில் மதுரை மாவட்டம் முன்னிலையில் உள்ளது.
பட்டா மாறுதல் உட்பிரிவு பட்டா மாறுதல் ஓ பி சி சான்றிதழ்
வாரிசு சான்றிதழ் போன்றவற்றில் தவறான ஆவணங்கள் அல்லது ஆவணங்கள் இணைக்க விட பட்டத காரணத்தால் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றன இ சேவை மையத்தினர் விண்ணப்பதாரரின் அலைபேசி எண்ணை முறையாக பதிவிடாமல் இருப்பதால் விண்ணப்பங்களை சரி பார்ப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது இவற்றை சரி பார்ப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இது போன்ற தவறுகளை செய்யும் மையங்களின் உரிமையை ரத்த செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ சாந்தி தெரிவித்தார். இதில் துணை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் வருவாய் ஆய்வாளர் சந்திரலேகா விஏஓக்கள் பாலமுருகன் ரமேஷ் செந்தில் முருகன் பாண்டிய ராஜன் செந்தில்குமரன் பங்கேற்றனர்.