சாலை பராமரிப்பு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்

1704பார்த்தது
சாலை பராமரிப்பு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்
திருமங்கலம் திமுக அரசு தேர்தல் வாக்குகளை நிறைவற்ற கோரி திருமங்கலம் நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் ரத்தக் கையெழுத்து போராட்டம் நடத்தினர். திமுக அரசு அமைந்த உடன் சாலை பணியாளர்களின் 41-மாத பணி நீக்க காலம் பணிக்களமாக அறிவிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை இதுவரை நிறைவேற்றாததால் தமிழக அரசை கண்டித்தும் உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் மாநில பொருளாளர் பரமேஸ்வரன் தலைமையில் ரத்த கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட தலைவர் மாரி கிளைத் தலைவர் ஜோதி மகாலிங்கம் துணைத் தலைவர் பாண்டியன் ஊரக வளர்ச்சி துறை தலைவர் அலுவலர் சங்க இணை செயலாளர் வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் மாநிலச் செயலாளர் மாரியப்பன் சாலை ஆய்வாளர் சங்க செயலாளர் முகமது அன்சாரி நிர்வாகிகள் ஆறுமுகம் கல்யாணசுந்தரம் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி