திருமங்கலம்: கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் பொது இடங்களில் இந்த ஒலிபெருக்கியை பொருத்தினால் அதனை போலீசார் அகற்றுவது வழக்கம்.
இந்நிலையில் திருமங்கலம் காவல் நிலையத்தில் வாகன போக்குவரத்து தொடர்பான அறிவுரைகளை கூம்பு வடிவ ஒலிபெருக்கி பொருத்தி காவல்துறை வழங்கி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடவடிக்கை எடுக்கும் காவல்துறையை விதி மீறுவதாக மக்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.