மதுரை: வாகன விபத்தில் ஒருவர் பலி. 2 சிறுவர்களுக்கு காயம்.

6பார்த்தது
மதுரை டூ திருமங்கலம் புறநகர் நான்கு வழிச்சாலையில் நிலையூர் முனியாண்டிபுரத்தை சேர்ந்த கந்தன் மகன் அழகு (28) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் இன்று (ஜூலை. 5) தனது அக்கா பசங்களை ஏற்றிக்கொண்டு பெட்ரோல் நிரப்புவதற்காக நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளார். மூவரும் செல்லும்போது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக டூவீலர் மோதியதில் அழகு தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்‌. மேலும் அழகுடன் வந்த அவரது அக்கா பசங்கள் 13, 14 வயது சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.

இதனைக் கண்டவர்கள் உடனே ஆம்புலன்ஸில் சிறுவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இறந்த அழகுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி